அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கில் பல கட்ட விராசணைக்கு பின்னர் கடந்த செப்டம்பர் 26ம் தேதி செந்தில் பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவியை ரத்து செய்யக்கோரி வித்தியாகுமார் என்பவர் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய்.எஸ்.ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “இந்த விவகாரத்தில் முன்னதாக உச்ச நீதிமன்றத்தில் விளக்கம் தருவதாக உறுதியளித்த பின்னர், தற்போது வழக்கில் இருந்து முந்தைய வழக்கறிஞர் மாறியுள்ளார் என்பதை எப்படி ஏற்க முடியும்.

மேலும் இந்த வழக்கில் தமிழ்நாடு அரசின் உள்துறை செயலாளரையும் எதிர்மனுதாரராக இணைக்கிறோம். அதேபோன்று இந்த விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக இருக்கும் வழக்குகள், சாட்சியங்கள், சாட்சிகளில் மொத்தம் உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கை ஆகிய விவரங்களை தமிழ்நாடு அரசு பதில் மனுவாக ஜனவரி 15ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்தி வைத்தனர்.

The post அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும்: தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: