போபால்: மத்தியப் பிரதேசம் ரதிபாத் அருகே மெண்டோரி காட்டில் அனாதையாக நின்று இருந்த காரில் 52 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அனாதையாக இருந்த காரை சோதனையிட்ட போது 52 கிலோ தங்கமும் ரூ.10 கோடி ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது. கேட்பாரற்று நின்ற காரில் கைப்பற்றப்பட்ட 52 கிலோ தங்கத்தின் மதிப்பு ரூ.42 கோடி என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணம் மற்றும் தங்கத்தை காரில் விட்டுச் சென்றது யார் என்பது பற்றி போலீஸாரும், வருமான வரித்துறையினரும் விசாரணை நடத்தி வந்தனர். போலீஸ் விசாரணையில் குவாலியரைச் சேர்ந்த சேத்தன்சிங் என்பவருக்கு சொந்தமான கார் என தகவல் வெளியாகியுள்ளது.
The post மத்தியப் பிரதேசத்தில் கேட்பாரற்று நின்ற காரில் 52 கிலோ தங்கம் பறிமுதல்!! appeared first on Dinakaran.