இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் சவுதாலாவின் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்; அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலாவின் மறைவு எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவர் பல ஆண்டுகளாக மாநில அரசியலில் தீவிரமாக இருந்தார் மற்றும் சவுத்ரி தேவிலாலின் பணியை தொடர்ந்து முன்னெடுத்து சென்றவர். இந்த துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார்.
The post அரியானா முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா மறைவு: பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் appeared first on Dinakaran.