பழனி முருகன் கோயிலின் 192 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு!!

திண்டுக்கல்: பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 192 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு செய்யப்பட்டது. 192.9 கிலோ பொன் இனங்களை சுத்த தங்கமாக மாற்றி தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. தங்க முதலீட்டு பத்திரத்தில் முதலீடு செய்ய பாரத ஸ்டேட் வங்கியிடம் தங்கம் ஒப்படைக்கப்பட்டது. தங்கம் முதலீடு செய்யும் நிகழ்ச்சி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது.

 

The post பழனி முருகன் கோயிலின் 192 கிலோ தங்கம் வங்கியில் முதலீடு!! appeared first on Dinakaran.

Related Stories: