நெல்லை: நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். கேரளாவில் இருந்து இறைச்சி, மருத்துவம் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை நெல்லை உள்ளிட்ட எல்லையோர மாவட்டங்களில் கொட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், நெல்லையை அடுத்த சுத்தமல்லி அருகே பழவூர் பகுதியில் தனியார் நிறுவன தோட்டப்பகுதி, அரசு புறம்போக்கு நிலம், வருவாய்த்துறை ஊழியரின் நிலத்தில், திருவனந்தபுரத்திலுள்ள மண்டல கேன்சர் மைய மருத்துவமனை முகவரியுடன் கூடிய மருத்துவக் கழிவுகள், ஊசிகள், உணவுக்கழிவுகள், பிளாஸ்டிக் டப்பாக்கள், வீட்டுக்கழிவு பொருட்கள் உள்ளிட்டவைகள் மூட்டை, மூட்டையாக கொட்டப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நெல்லை மாவட்ட வருவாய் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகரிகள் அங்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். புகாரின்படி சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கழிவுகளை கொட்டியது தொடர்பாக சுத்தமல்லியைச் சேர்ந்த மாயாண்டி (42), மனோகர் (51) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கோடகநல்லூரில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளுக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம் மறுத்துள்ளது.
இந்நிலையில் நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 10 பேர் அடங்கிய குழுவினர் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
The post நெல்லை அருகே மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் கேரள சுற்றுச்சூழல், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு appeared first on Dinakaran.