சூறைக்காற்றுடன் கனமழை; மணலி புதுநகர் சாலையில் உடைந்து விழுந்த மின்கம்பம்

திருவொற்றியூர்: சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மணலி புதுநகரில் மின்கம்பம் உடைந்து சாலையில் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வடசென்னை பகுதியில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்துவருவதால் திருவொற்றியூர், எண்ணூர், மணலி மற்றும் மணலி புதுநகர் ஆகிய இடங்களில் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.

நேற்று மாலை மணலி புதுநகர் அய்யா கோயில் அருகே தெருவிளக்கு மின்கம்பம் முறிந்து கீழே சாலையின் நடுவே விழுந்தது. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் வாகன ஓட்டிகள் தவித்து வருகின்றனர். மின்கம்பம் சாய்ந்துவிழும்போது வாகனங்கள் எதுவும் செல்லாததால் மக்கள் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் மணலி மண்டல தெருவிளக்கு பிரிவு அதிகாரிகள் வந்து சாய்ந்த மின்கம்பத்தை அப்புறப்படுத்தினர்.

The post சூறைக்காற்றுடன் கனமழை; மணலி புதுநகர் சாலையில் உடைந்து விழுந்த மின்கம்பம் appeared first on Dinakaran.

Related Stories: