மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “தமிழ்நாட்டின் வளங்களான கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டு, கேரளாவிற்குக் கடத்திக் கொண்டு இருக்கின்றனர். கேரளாவில் இருக்கின்ற கழிவு பொருட்களை அதாவது மருத்துவ கழிவு, குப்பைகள், ஏலக்ட்ரானிக் கழிவுகள், போன்றவற்றைத் தமிழ்நாட்டின் எல்லைகளில் டன்னு டன்னாக கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர்.
தமிழக மக்கள் சார்பாக உடனடியாக அந்த குப்பைகளை அகற்றி யார் அந்த குப்பைகளை கொட்டினார்கள் என்பதை கண்டுடறிந்து அவர்களின் நாட்டிற்கே அந்த குப்பைகளை திருப்பி அனுப்பி வைக்க வேண்டும். இதை தமிழ்நாட்டின் முதலமைச்சர் கவனத்தில் கொண்டு அதற்கான உரிய நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும். தமிழ்நாட்டைக் குப்பை நாடா மாற்றிய கேரள அரசைக் கடுமையாக கண்டிக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
The post தமிழ்நாட்டு எல்லையில் கொண்டு வந்து கொட்டப்படும் குப்பைகளை அகற்றி அவர்கள் நாட்டிற்கே அனுப்பி வைக்க வேண்டும்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா appeared first on Dinakaran.