அரியலூர், டிச.11: அரியலூர் அண்ணாசிலை அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசைக் கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், ஆண்டுகளாக நீடித்து வரும் மணிப்பூர் கலவர சூழல் குறித்து மக்களவையில் விவாதிக்க அனுமதித்திட வேண்டும். அதானி தொழில் சாம்ராஜ்ஜியத்தின் சட்ட விரோத கிரிமினல் செயல்களை மக்களவை கூட்டு குழு விசாரிக்க வேண்டும். இதற்கு முட்டுக்கட்டை போடுவதை பிரதமர் மோடி கைவிட வேண்டும்.
உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பெருகிவரும் வேலையில்லா திண்டாட்டத்தை தடுக்க வேலைவாய்ப்பை பெருக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு அரியலூர் ஒன்றியச் செயலர் பாண்டியன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்டச் செயலர் தண்டபாணி கோரிக்கை விளக்கவுரையாற்றினார். திருமானூர் முன்னாள் ஒன்றியச் செயலர் ஆறுமுகம், செந்துறை ஒன்றியக் குழு உறுப்பினர் கே.சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
The post ஒன்றிய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.