பெரம்பலூர், டிச.11: வருகிற 14ம்தேதி மகளிர் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் நடப்பதாக கிரிக்கெட் சங்க மேலாளர் பிரவின்குமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது : பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் கிரிக்கெட் அணியினை தேர்ந்தெடுக்கும் பொருட்டு வரும் 14ம்தேதி நண்பகல் 12 மணியளவில் எளம்பலூர் தண்ணீர்பந்தல் தந்தை ஹேன்ஸ் ரோவர் கலைக்கல்லூரி மைதானத்தில் மகளிர் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் நடைபெறுகிறது.
இதற்கு 2012 ஆகஸ்டு 31க்கு முன்னர் பிறந்தவர்கள் மட்டுமே கலந்துகொள்ளலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் வயது வரம்பு சான்றிதழ் மற்றும் ஆதார் நகலுடன் வரவேண்டும். மேலும் விபரங்களுக்கு 9840673348, 9944139234,9865953023 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என சங்க மேலாளர் பிரவின்குமார் வெளியிட்டுள்ள அறிவிப் பில் தெரிவித்துள்ளார்.
The post வருகிற 14ம்தேதி மகளிர் கிரிக்கெட் வீரர்கள் தேர்வு முகாம் appeared first on Dinakaran.