பெரம்பலூர், டிச.16: பெரம்பலூர் அருகே செங்குணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் வட்டம், செங்குணம் அரசு உயர் நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக தமிழ்க்கூடல் எனும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதனையொட்டி நடைபெற்ற விழாவிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மதியழகன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் நல்லாசிரியர் விருதினைப் பெற்ற, அம்மாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் இராமர் பங்கேற்று, பள்ளிகளில் பயிலும் மாணவர்களி டையே தமிழ் ஆா்வத்தைத் தூண்டும் வகையில் தமிழின் தொன்மை, தமிழின் சிறப்பு உட்பட பல்வேறு தகவல்களை எடுத்துக் கூறினார்.
தொடர்ந்து 6 முதல் 10 வரை வகுப்பு வாரியாக பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற, தனித்திறன்களில் சிறந்து விளங்கிய மாண வர்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி ஊக்கம் அளிக்கப்பட்டன. நிகழ்ச்சியில் பாட ஆசிரியர் கள் சாந்தியம்மாள், ராமலிங்கம், ரமேஷ், விளையாட்டு ஆசிரியர் அசோக் மற்றும் செங்குணம் குமார் அய்யாவு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். முன் னதாக உதவி தலைமை ஆசிரியர் சிவானந்தம் வரவேற்றார். முடிவில் தமிழ் ஆசிரியை செல்வி நன்றி கூறினார்.
The post தமிழ்க்கூடல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.