முன்னதாக அஞ்சலி பின் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது: கோவை சிறையில் இருந்தபோது பாஷாவுடன் மனம் விட்டு பேசி இருக்கிறேன். இது மிகப்பெரிய துயரம். அவரை இழந்து வாடும் இஸ்லாமிய சொந்தங்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக மீதமுள்ள சிறைவாசிகளை வெளியே கொண்டு வர போராடுவோம். 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்தவர்களை விடுதலை செய்ய வேண்டும். இதற்காக ஆளுநரிடம் மனு அளிப்பது வீண் வேலை. இதில் ஆளுநர் கையெழுத்திடமாட்டார். ஆளுநருக்கும், பாஜவிற்கும் ஒரே கொள்கை நிலைப்பாடுதான்.
இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசுவது, சிந்திப்பது தவிர அவர்களுக்கு வேறு கொள்கை இல்லை. மக்களின் பிரதிநிதித்துவம் பெற்றவர்களுக்கு இல்லாத அதிகாரம், நியமன உறுப்பினரான ஆளுநருக்கு இருக்கிறது என்றால் மக்களாட்சி எங்கே இருக்கிறது? இதுதான் ஜனநாயகமா? மக்களின் மனநிலைக்கு ஏற்ப அரசாட்சி செய்ய வேண்டும். எங்களிடம் அதிகாரம் இருந்தால், ஆளுநர் கையெழுத்தை அப்புறம் பார்க்கலாம் என சிறை கதவுகளை திறந்துவிட்டு இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
The post இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசுவது, சிந்திப்பதுதான் ஆளுநருக்கும், பாஜவிற்கும் ஒரே கொள்கை நிலைப்பாடு: சீமான் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.