சூர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் இந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர். அவர் உடல் எடையை ஏற்றியதோடு அல்லாமல், செம ஃபிட்டாக இருப்பதையும் பார்த்து ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். இந்த புகைப்படமும் வைரலாகி வருகிறது. இதற்கு முன் வாரணம் ஆயிரம் படத்துக்காக சிக்ஸ் பேக் உடல்கட்டுக்கு சூர்யா மாறியிருந்தார். அதன் பிறகு இப்போது மீண்டும் அதே தோற்றத்துக்கு மாறி வருகிறார். இதற்காக கடுமையான உணவு டயட்டிலும் அவர் இருக்கிறாராம்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் கங்குவா உருவாகிறது. சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இதில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் நடித்து வரும் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவில் நிஷாத் யூசுப் படத்தொகுப்பில் மதன் கார்க்கி வசனத்தில் உருவாகி வரும் இந்த படத்திற்கு தேவி பிரசாத் இசையமைக்கிறார்.
The post கங்குவா படத்துக்காக சிக்ஸ் பேக்கிற்கு மாறும் சூர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.