ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

திருப்புத்தூர், டிச.17: திருப்புத்தூரில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்டுவதற்கும் கூட்டுறவுதுறை அமைச்சர் பெரியகருப்பன் அடிக்கல் நாட்டினர்.

விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வைத்தார். கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர். பெரியகருப்பன் திருப்புத்தூர் அருகே காட்டாம்பூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சார்பில் ரூ.2 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு நிலைய கட்டிடம் கட்டுவதற்கு நடந்த பூமி பூஜையில் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.

மேலும் அப்பகுதியில் அமைச்சர் பெரியகருப்பன் மரக்கன்றுகளை நட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலர்(பொ) அப்பாஸ், உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் செந்தில்குமார், யூனியன் சேர்மன் சண்முகவடிவேல், திருப்புத்தூர் வட்டாட்சியர் மாணிக்கவாசகம், திமுக மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினர் பள்ளத்தூர் கேஎஸ்.ரவி, திமுக கல்லல் ஒன்றிய செயலாளர் குன்றக்குடி சுப்பிரமணியன், திருப்புத்தூர் நகரக் கழக செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய கவுன்சிலர் சகாதேவன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

The post ரூ.2.17 கோடி மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா appeared first on Dinakaran.

Related Stories: