தமிழகத்தில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட ஃபெஞ்சல் புயல் காரணமாக 2,86,069 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 73,263 ஹெக்டேர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன, இதனைத் தொடர்ந்து பெய்த வடகிழக்குப் பருவமழையின் காரணமாக 2,25,655 ஹெக்டேர் பரப்பில் வேளாண் பயிர்களும், 45,634 ஹெக்டர் பரப்பில் தோட்டக்கலைப்பயிர்கள் சேதமடைந்துள்ளன. ஆக மொத்தம் இதுநாள் வரை 6,30,621 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி மற்றும் அரகண்டநல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் 2906 மெ.டன் வேளாண் விளைபொருட்கள் சேதமடைந்துள்ளது.
பயிர் சேதப்பரப்பு கணக்கீட்டுப் பணியினை 17.12.2024 க்குள் முடித்து, மாநில பேரிடர் நிவாரணத் தொகையினை விவசாயிகளுக்கு விரைவாக பெற்றுத் தரும் வகையில் உரிய கருத்துரு அரசிற்கு விரைவில் அனுப்பப்பட வேண்டும் என வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் அறிவுறுத்தினார்கள். மேலும் கணக்கீட்டின் போது பாதிப்படைந்த எந்த விவசாயியும் விடுபடக்கூடாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்கள். மேலும், விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பீட்டினை ஈடுகட்டும் விதமாக, பயிர் காப்பீட்டின் கீழ் விரைவாக இழப்பீடு வழங்குவது குறித்து விவாதிப்பதற்காக புள்ளியியல் துறை மற்றும் பயிர் காப்பீடு நிறுவனங்களுடன் 17.12.2024 கூட்டம் நடத்திட அறிவுறுத்தினார்கள்.
இக்கூட்டத்தில் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வா, இ.ஆ.ப., வேளாண்மைத் துறை இயக்குநர் பி.முருகேஷ், இ.ஆ.ப, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் பி.குமரவேல் பாண்டியன், இ.ஆ.ப., தமிழ்நாடு வடிநீர்ப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் / மேலாண்மை இயக்குநர் ஜெ.ஜெயகாந்தன், இ.ஆ.ப., தலைமைப் பொறியாளர் (வே.பொ) ஆர்.முருகேசன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
The post ஃபெஞ்சல் புயலால் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம்..!! appeared first on Dinakaran.