நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிய டாட்டூ கடை உரிமையாளர் கைது: கடைக்கு சீல் வைத்து, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

திருச்சி: திருச்சியில் டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்களை செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். சமீப காலமாக இளைஞர்கள் தனது கை, கால், போன்ற உடல் பாகங்களில் டாட்டூ போடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பல்வேறு மாவட்டங்களில் டாட்டூ போடுவது அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில், திருச்சி மேலசிந்தாமணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் போதிய body modivication culture என்ற பெயரில் டாட்டூ சென்டர் நடத்தி வந்துள்ளார். அந்த டாட்டூ சென்டரில் கண்களுக்கு பெயிண்ட் செய்வது, நாக்கை அறுவை சிகிச்சை செய்து அதை 2 துண்டுகளாக வெட்டி அதில் கலரிங் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது தொடர்பான வீடியோ காட்சிகளை இன்ஸ்டா கிராமில் பதிவு செய்து இது போன்று உங்களுக்குக்ம் செய்ய வேண்டும் என்றால் டாட்டூ சென்டருக்கு வாருங்கள்.

என்ற விடீயோக்களை பதிவு செய்திருந்தார். இந்த வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு இது போன்று மருத்துவ கட்டுப்பாடுகளை மீறி தனது சென்டர்களிலேயே அறுவை சிகிச்சை மேற்கொண்ட இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கோரிக்கை எழுந்த நிலையில் தற்போது அந்த விடீயோக்கள் அதிகமாக பகிரப்பட்டு வரும் நிலையில், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி உத்தரவின் பெயரில் கோட்டை காவல் நிலைய போலீசார் 7 பிரிவின் கீழ் இளைஞர்கள் ஹரிஹரன், ஜெயராமன் ஆகிய இருவரும் தற்போது கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சற்று நேரத்தில் சிறையில் அடைக்க உள்ளனர். இத்தகைய சம்பவம் திருச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அவர்களது டாட்டூ சென்டருக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

The post நாக்கின் நுனிப்பகுதியை இரண்டாக வெட்டிய டாட்டூ கடை உரிமையாளர் கைது: கடைக்கு சீல் வைத்து, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.

Related Stories: