மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா: லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார்

மேல்மருவத்தூர்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இரு முடி விழா, மங்கள இசையுடன் நேற்று அதிகாலை துவங்கியது. கருவறை முன்பாக இயற்கை வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து சுயம்பு அம்மனுக்கு இருமுடி அபிேஷகத்தை இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தானர். முதலில் 9 சிறுமியர்களும், 9 தம்பதிகளும் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் அபிஷேகம் செய்தனர்.

நிகழ்ச்சியில் ஆன்மீக இயக்க துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், தேவி, ஆதிபராசக்தி செவிலியர் கல்லூரி தாளாளர் லேகா செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். லட்சக்கணக்கான பக்தர்கள் சக்தி மாலையணிந்து விரதம் இருந்து ஆதிபராசக்தி அம்மனுக்கு இருமுடி சுமந்து வந்து செலுத்தி சுயம்பு அன்னைக்கு அபிஷேகம் செய்து வருகின்றனர். இந்த இரு முடிவிழா பிப்ரவரி 10ம் தேதி வரை நடக்கிறது. இதையடுத்து 11ம் தேதி அன்று தைப்பூச ஜோதி ஏற்றப்பட உள்ளது. அதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளவார்கள். இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இன்று துவங்கி விழா முடியும் வரை தொடர்ந்து 50 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருமுடி விழாவிற்காக பல்வேறு நாடுகள், மாநிலங்கள் மற்றும் பல மாவட்டங்களில் இருந்தும் பல லட்சம் பக்தர்கள் மேல்மருவத்தூர் செல்ல உள்ளனர். விழாவினை ஒட்டி தென்னக ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குகிறது. வழக்கமாக செல்லும் பல விரைவு ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்கின்றன. ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், துணைத் தலைவர்கள் அன்பழகன், செந்தில்குமார், தேவி, ரமேஷ் உள்ளிட்ட ஆன்மிக இயக்கத்தினர் செய்திருந்தனர்.

The post மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் இருமுடி விழா: லட்சுமி பங்காரு அடிகளார் துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Related Stories: