அதற்கு அவர், மகனும் மருமகளும் பல மணி நேரங்களுக்கு முன்னதாகவே வீட்டை விட்டு கிளம்பி விட்டனரே என்று கூறியுள்ளார். அதைத் தொடர்ந்து, பாயலின் தந்தையும், பாவிக்கின் பெற்றோரும் புதுமண ஜோடியை பல இடங்களில் தேடினர். உள்ளூர் போலீசிலும் புகார் அளிக்கப்பட்டது. இருதரப்பு பெற்றோர்களும் பல இடங்களில் தேடியபோது, பாவிக்கிற்குச் சொந்தமான இரு சக்கர வாகனம், சாலையோரம் தனியாக கிடந்தது. அதை பார்த்த பெற்றோர், போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் அந்த இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். அதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில், ‘பாயலுக்கும் அவரது உறவினரான கல்பேஷூம் காதலித்து வந்தனர். ஆனால் அவர்கள் விருப்பப்படி திருமணம் நடக்கவில்லை. மாறாக பாவிக் என்பவருடன் பாயலுக்கு திருமணம் நடந்தது.
இந்த நிலையில் பாயலும், பாவிக்கும் பைக்கில் சென்ற போது, அவர்களை காதலன் கல்பேஷ் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் பின்தொடர்ந்து சென்றனர். அவர்கள் பைக்கில் பாயலை அழைத்து சென்றுபாவிக்கின் தலையில் தாக்கினர். அதனால் நிலைகுலைந்து பாவிக் கீழே விழுந்தார். பின்னர் அவரை கடத்திச் சென்று கழுத்தை நெரித்து கொலை செய்தனர். அவரது உடலை அருகிலுள்ள நர்மதா கால்வாயில் வீசி எறிந்தனர். இந்த கொலை சம்பவத்திற்கு பாயலும் உடந்தையாக இருந்துள்ளார். பாயல் மற்றும் அவரது காதலன் உட்பட 3 பேர் மீது பி.என்.எஸ் சட்டத்தின் கீழ் கொலை, கொலைக்கு சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் கடத்தல் ஆகிய பிரிவுகளின் வழக்குபதிவு செய்து, 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகிறோம்’ என்று கூறினர்.
The post திருமணமான 4 நாட்களில் நடந்த கொடூரம்: கணவனை காதலனுடன் சேர்ந்து கொன்று உடலை கால்வாயில் வீசிய மனைவி: குஜராத்தில் பயங்கரம் appeared first on Dinakaran.