பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்: ரத்தக் காயத்துடன் வீடு திரும்பிய கொடூரம்

நாகவுர்: ராஜஸ்தானில் பள்ளியில் தேர்வு எழுவிட்டு திரும்பிய போது 7 வயது மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவர் ரத்தக் காயத்துடன் வீடு திரும்பிய கொடூரம் நடந்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் நாகவுர் மாவட்டம் இந்திரா நகர் காவல் நிலையப் பகுதியை சேர்ந்த ஏழு வயது மாணவி இரண்டாம் வகுப்பு படிக்கிறார். அரையாண்டு தேர்வு எழுதுவதற்காக வீட்டில் இருந்து பள்ளிக்குச் சென்றிருந்தார். பள்ளியில் வகுப்புகள் முடிந்த பின்னர், மாணவி வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.

பேருந்தில் இருந்து இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்து சென்றபோது, அப்பகுதியில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் மாணவியிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் அந்த மாணவியை மறைவான இடத்திற்கு அழைத்து சென்றார். பின்னர் அங்கு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மாணவி அந்த கொடூரனிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றும் முடியவில்லை. அப்பகுதியில் யாரும் இல்லாததால், ரத்தக் காயங்களுடன் மயக்க நிலையில் மாணவி கிடந்தார். குற்றவாளி இளைஞரும் பாதிக்கப்பட்ட மாணவியை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பல மணி நேரத்திற்கு பின்பு மயக்கம் தெளிந்த பின்னர், அந்த மாணவி தனது வீட்டிற்கு திரும்பினார். மாணவியின் நிலையைப் பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

உடனடியாக அஜ்மீரில் உள்ள ஜே.எல்.என் மருத்துவமனையில் மாணவியை அனுமதித்தனர். மருத்துவர்களின் பரிசோதனையில் மாணவி பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும், இந்திராநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிலேஷ் மைன்கர் மற்றும் உதவி போலீஸ் கமிஷனர் சோஹைல் ஷேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மாணவியை பரிசோதனைக்கு உட்படுத்தினர். தலைமறைவான குற்றம் சாட்டப்பட்ட நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு திரும்பியபோது 7 வயது மாணவி பாலியல் பலாத்காரம்: ரத்தக் காயத்துடன் வீடு திரும்பிய கொடூரம் appeared first on Dinakaran.

Related Stories: