இதையடுத்து மும்பை விரைந்த தனிப்படை போலீசார் அங்கு தாராவியில் பதுங்கி இருந்த நிகில் விகாஷ் (29), அஜய் குமார் (28) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் அங்கு மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகின்றனர். இதனைத்தொடர்ந்து அவர்களிடம் இருந்து 340 போதை மாத்திரை மற்றும் ஒரு டைரி, 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த டைரியை ஆய்வு செய்த போது பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. தமிழ்நாட்டில், கோவை, திருப்பூர், சென்னை, மதுரை, திண்டுக்கல், தாம்பரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு சப்ளை செய்துள்ளனர். இவர்களிடம் தமிழ்நாட்டில் மட்டும் 80 தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகளை வாங்கி இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வந்துள்ளனர்.
மேலும் அவர்கள் அந்த டைரியில் தங்களது வாடிக்கையாளர் முகவரி, செல்போன் எண்களை குறித்து வைத்துள்ளனர். அதனை தனிப்படை போலீசார் கைப்பற்றி அவர்களிடம் போதை மாத்திரை வாங்கிய 80 பேருக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
The post தமிழகம் முழுவதும் போதை மாத்திரை சப்ளை; 2 மெடிக்கல் ஸ்டோர் உரிமையாளர்கள் கைது: 80 பேருக்கு சம்மன் appeared first on Dinakaran.