அப்போது நொச்சியில் இருந்து குறுகிய சாலையான வீரசிகாமணி செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பள்ளி பேருந்து அருகில் இருந்த வயல்வெளியில் விழுந்து விபத்துக்குள்ளானது. பேருந்து விபத்துக்குள்ளானதில் வண்டியிலிருந்து 4 குழந்தைகள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அருகில் உள்ள வீரசிகாமணி தெருவில் உள்ள 2 குழந்தைகள் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மொத்தமாக 10 க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
The post சங்கரன்கோவில் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து: பத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் appeared first on Dinakaran.