பஞ்சமூர்த்திகளில் ஒருவரான பராசக்தி அம்மனும், நகர எல்லை காவல் தெய்வமான துர்க்கையம்மனும் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி உடன் கிரிவலம் சென்றனர். அதோடு, அடி அண்ணாமலை திருக்கோயிலில் இருந்து உற்சவ மூர்த்திகளும் சுவாமியுடன் கிரிவலம் சென்றனர்.மலை மீது மகாதீபம் காட்சியளிக்கும் நாளில் அண்ணாமலையார் கிரிவலம் செல்வதை தரிசனம் செய்ய, கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கிமீ தூரமும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்தனர். மேலும், கிரிவலப்பாதையின் பல்வேறு இடங்களில் சுவாமிக்கு மண்டகப்படி செலுத்தப்பட்டது. காலையில் தொடங்கிய அண்ணாமலையார் கிரிவலம் மாலை 3 மணியளவில் கோயிலில் நிறைவடைந்தது. கிரிவலம் முடிந்து கோயிலுக்கு திரும்பிய சுவாமிக்கு சிறப்பு தீபாரதனை நடந்தது. தீபமலையை, அண்ணாமலையாரே ஆண்டுக்கு 2 முறை வலம் வருவது சிறப்பாகும். அதன்படி, தை மாதம் 5ம் நாள் திருவூடல் முடிந்த மறுதினமும், கார்த்திகை மாதம் மகாதீபம் ஏற்றப்பட்ட பிறகு தெப்பல் உற்சவத்தின் 2வது நாளிலும் அண்ணாமலையார் கிரிவலம் சென்று அருள்பாலிக்கிறார்.
The post கார்த்திகை தீபத்திருவிழா; அண்ணாமலையார் 14 கி.மீ. கிரிவலம்: ஏராளமான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.