20 லட்சம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி

சென்னை: பள்ளி மாணவர்களுக்கு ஏஐ என்னும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.ஒவ்வொரு தொழிலிலும், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் குறித்து, பல்வேறு தொழில் துறையினரிடம், தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் கருத்து கேட்டுள்ளது. இதையடுத்து, ‘கூகுள்’ நிறுவனத்துடன் இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் பேரில் சுமார் 20 லட்சம் மாணவ மாணவியர் செயற்கை நுண்ணறிவு பயிற்சி பெற உள்ளனர்.

கூகுள் நிறுவனத்துடன், தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டதின் அடிப்படையில் ‘ஸ்டார்ட் அப்’ எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஒருங்கிணைந்து இதில் செயல்பட உள்ளன. தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, தொழில் துறையில் ஏ.ஐ., தொழில்நுட்பம் எப்படி எல்லாம் பயன்படுகிறது;

பயன்பட போகிறது என்று தொழில் துறையினரிடம் கருத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கருத்து கேட்டது. அவர்கள் தெரிவித்த கருத்துகளை பெற்றபிறகு ஏ.ஐ., தொழில்நுட்பத்துக்காக, தமிழகத்தில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து, ஆய்வகம் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு தொழிலிலும் ஏ.ஐ., பயன்பாடு எப்படி உள்ளது என்ற விபரம் அறியவும் திட்டமிட்டுள்ளது.

The post 20 லட்சம் மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி appeared first on Dinakaran.

Related Stories: