மேலும், உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கான என்ஐடிடிடிஆர் களஞ்சியம் டிஜிட்டல் கல்வி வலைத்தளம் மற்றும் மனநல ஆரோக்கியம் காக்கும் பயிற்சி திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சென்னை என்ஐடிடிடிஆர் இயக்குநர் உஷா நடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் தலைவர் டீ.ஜி.சீதாராம் பேசியதாவது: இந்தியாவின் பண்டையகால ஞானத்துக்கும் நவீன தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கும் இடையே ஆழமான தொடர்புள்ளது. டிஜிட்டல் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் புரட்சி ஏற்படுத்த ஆக்மென்டட் ரியாலிட்டி, விர்ச்சுவல் ரியாலிட்டி, ஏஐ மற்றும் பிளாக்செயின் போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களின் திறனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இஸ்ரோ மற்றும் டிஆர்டிஓ நிறுவனங்களில் பணிபுரியும் நாட்டின் தலைசிறந்த பொறியாளர்கள் நாட்டிலுள்ள சாதாரண பொறியியல் கல்லூரிகளில் பயின்றவர்கள். உலகில் குறைந்த செலவில் தரமான சிறந்த விண்வெளி தொழில்நுட்பங்களை நமது பொறியாளர்கள் எட்டியுள்ளனர். எதிர்காலத்தை வடிவமைக்கவும், சமூக முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்லவும் பொறியாளர்கள் தங்கள் புதுமையான படைப்புகளை உருவாக்க வேண்டும். வரும்காலத்தில் உலகத்தை இந்தியாவின் அறிவுத்திறனே வழிநடத்தும். இவ்வாறு பேசினார்.
The post இந்தியாவின் அறிவுத்திறனே வரும்காலத்தில் உலகத்தை வழிநடத்தும்: ஏஐசிடிஇ தலைவர் சீதாராம் பேச்சு appeared first on Dinakaran.