இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திற்கு விடுத்த கனமழை எச்சரிக்கை காரணமாக நேற்று மற்றும் நேற்று முன்தினம் (டிச.13, 14) உள்ளிட்ட இரு நாட்கள் மலை ரயில் சேவையை ரத்து செய்து தென்னக ரயில்வே உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக மலை ரயில் பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்துள்ளதால் தண்டவாளம் சேதமடைந்துள்ளது.
இதனால், மலை ரயில் பாதை சீரமைப்பு பணி நடைபெற்று வருவதால் மேலும், மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யும் என்ற வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை காரணமாக (டிச.15,16,17) இன்று, நாளை மற்றும் நாளை மறுதினம் என 3 நாட்களுக்கு மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாகவும், இதேபோல் குன்னூர்-ஊட்டி-குன்னூர் இடையிலான ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாகவும் தென்னக ரயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நிலச்சரிவால் மேலும் 3 நாட்களுக்கு ஊட்டி மலை ரயில் சேவை ரத்து appeared first on Dinakaran.