பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: முன்னாள் துணை பிரதமரும், பாஜ மூத்த தலைவருமான எல்.கே. அத்வானி ேநற்று டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பா.ஜ மூத்த தலைவர் எல்.கே. அத்வானி(96) வயது மூப்பு காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்து வருகிறார். அவருக்கு உடல் நிலையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லி இந்திரபிரஸ்தாவில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

மூத்த மருத்துவர்கள் குழுவின் கண்காணிப்பில் இருக்கும் அவர் நலமாக இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், டாக்டர் வினித் சூரியின் கண்காணிப்பில் நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இதே மருத்துவமனையில் அத்வானி அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

The post பாஜ மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.

Related Stories: