இதனால் கே.எல்.ராகுல் மிடில் ஆர்டரில் ஆடுவார். விராட் கோஹ்லி, ஜெய்ஸ்வால்,ரிஷப் பன்ட், சுப்மன் கில் என சிறந்த வீரர்கள் நிலைத்து நின்று ஆடினால் தான் ரன் குவிக்க முடியும். பவுலிங்கில் முதுகெலும்பாக உள்ள பும்ரா, தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட நிலையில் பயிற்சியின் போது அவர் பந்துவீசவில்லை. இருப்பினும் அவர் உடற்தகுதியுடன் இருப்பதால் களம் இறங்குவது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அஸ்வினுக்கு பதிலான வாஷிங்டன் சுந்தர் வாய்ப்பை பெறுகிறார். இதேபோல் ஹர்சித் ரானாவுக்கு பதிலாக ஆகாஷ் தீப் அல்லது பிரசித் கிருஷ்ணாவுக்கு ஆடும் லெவனில் இடம்கிடைக்கலாம்.
மறுபுறம் ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் அடிலெய்டில் சதம் விளாசி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். கவாஜா, ஸ்மித்,மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி ஆகியோர் ரன் குவிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
இந்த போட்டிற்கான ஆடும் லெவனை ஆஸ்திரேலியா இன்று அறிவித்தது. காயத்தில் இருந்து ஹேசல்வுட் மீண்டு வந்துள்ளதால் போலன்ட்டுக்கு பதிலாக ஆடும் லெவனில் இடம் பெறுகிறார். மற்றபடி அணியில் எந்த மாற்றமும் இல்லை. இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.50 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
ஆஸ்திரேலிய லெவன்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, லாபுசாக்னே, ஸ்டீவ் ஸ்மித், டிராவிஸ் ஹெட், மிட்ச் மார்ஷ், அலெக்ஸ் கேரி (வி.கீ), பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியோன், ஜோஷ் ஹேசில்வுட்
இந்தியஅணி: ரோகித் சர்மா (கே), ஜெய்ஸ்வால், கில், கோஹ்லி, கே.எல் ராகுல், ரிஷப் பன்ட் (வி.கீ), நிதிஷ் குமார், வாஷிங்டன் சுந்தர், பும்ரா, பிரசித்த கிருஷ்ணா அல்லது ஆகாஷ் திப், சிராஜ்.
The post இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் 3 வது டெஸ்ட் நாளை தொடக்கம்: மீண்டும் தொடக்க வீரராக ஆடும் ரோகித்சர்மா appeared first on Dinakaran.