சேந்தமங்கலம், டிச.13: கொல்லிமலை செம்மேடு அரசு மருத்துவமனையில், நோயாளர் நல சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு நாமக்கல் ஆர்டிஓ பார்த்திபன் தலைமை வகித்தார். முதன்மை மருத்துவர் சத்யா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் சேந்தமங்கலம் எம்எல்ஏ பொன்னுசாமி கலந்து கொண்டு பேசுகையில், ‘நோயாளர் நல சங்கத்தின் உள்ள உறுப்பினர்கள், அரசு மருத்துவமனையில் உள்ள குறைகளை தீர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தலைமை மருத்துவர் மருத்துவமனைக்கு தேவையானது குறித்து கோரிக்கை மனு கொடுத்தால் அதனை அரசு செய்து கொடுக்க தயாராக உள்ளது. மருத்துவமனையில் உள்ள காலி பணியிடங்கள் அனைத்தும் விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். கூட்டத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மற்றும் சுகாதாரத் துறையினர் கலந்து கொண்டனர்.
The post செம்மேடு ஜி.ஹெச்சில் நோயாளர் நல சங்க ஆலோசனை கூட்டம் appeared first on Dinakaran.