ஆண்டுதோறும் வெகு விமர்ச்சையாக நடக்கும் முத்துகிருஷ்ண சுவாமியின் 111வது குருபூஜை மற்றும் குரு ஜெயந்தி விழா தேரோட்டமத்தை முன்னிட்டு கடந்த 4ம்தேதி ெகாடியேற்றத்துடன் துவங்கயது. இதனைத்தொடர்நது 10 நாட்கள் விசேட பூஜைகள், கலைநிகழ்ச்சிகள் மற்றும் அன்னதானம் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று (செவ்வாய்கிழமை) காலை 5 மணியளவில் சூட்டுப்பொத்தை மலையடிவாரம் ஸ்ரீ வனவிநாயகர் சன்னதி முன்பு இருந்து கிரிவல தேரோட்டம் துவங்கி கிரிவலப்பாதையில் நடந்தது. தேரில் முத்துகிருஷ்ணசுவாமி எழுந்தருள மாதாஜி பூஜ்யஸ்ரீ வித்தம்மா தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேரானது சூட்டுபொத்தையை சுற்றி அமைக்கப்பட்டுள்ள 5 கீலோ மீட்டர் தூரத்திற்கான கிரிவல பாதையில் வலம் வந்தது. தேரோட்டத்தின் போது செண்ட மேளம், பஞ்சகவாத்தியம், நாதஸ்வரம் நிகழ்ச்சி நடந்தது.
தேரோட்டத்தை தொடர்ந்து நாளை (11ம்தேதி) புதன்கிழமை 7.15 மணிக்கு குருபூஜை விழாவும், 13ம்தேதி வெள்ளிகிழமை காலை 7.15 மணிக்கு குரு ஜெயந்தி விழாவும், மாலை 5.00 மணிக்கு சூட்டுப்பொத்தை மீது காத்திகை தீபம் ஏற்றும் விழாவும் நடைபெறும். 14ம்தேதி சனிக்கிழமை காலை 5 மணிக்கு கிரிவலமும் மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை ஸ்ரீமுத்துகிருஷ்ணா சித்திரகூடத்திலும் நடைபெறும். விழாவை முன்னிட்டு தினமும் காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகளும் தொடர்ந்து மாலை 6 மணிக்கு சிறப்பு பூஜைகளும் பஜனையும், பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். திருவிழா நாட்களில் தினமும் கலைநிகழ்ச்சிகளும் சிறப்பு மருத்துவ முகாமும், அன்னதானமும் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை பூஜ்யஸ்ரீ மாதாஜி வித்தம்மா தலைமையேற்று முத்துகிருஷ்ண சுவாமி மிஷன் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
The post வள்ளியூர் சாமியார் பொத்தை ஸ்ரீபுரம் முத்துகிருஷ்ணசுவாமி கோவிலில் தேரோட்டம் appeared first on Dinakaran.