செஸ் விளையாட்டில் சாதனை: கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த 9 வயது சிறுவன்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் கே ஐஐடி இன்டர்நேஷனல் ஓபன் செஸ் தொடர் நடைபெற்றது. இதில் அமெரிக்காவை சேர்ந்த 66 வயதான கிராண்ட் மாஸ்டர் ராசித், 9 வயது சிறுவன் ஆர்த்தி கபிலுடன் பலப்பரீட்சை நடத்தினார். `சிறுவன் தானே’ என்ற பாணியில் விளையாடிய ராசித்தை, சிறுவன் ஆர்த்தி கபில் கடும் நெருக்கடிக்கு ஆளாக்கி உள்ளார். இந்த போட்டியில் ராசித் செய்த தவறை பயன்படுத்திக் கொண்ட ஆர்த்தி கபில் சுமார் 63 நகர்த்தலுக்கு பிறகு வெற்றி பெற்று அசத்தி உள்ளார். இதன் மூலம் கிராண்ட் மாஸ்டர் அந்தஸ்து பெற்ற வீரரை வீழ்த்திய இளம் இந்திய வீரர் என்ற சாதனையை ஆர்த்தி கபில் படைத்திருக்கிறார்.

உலக அளவில் இந்தியா வம்சாவளியை சேர்ந்த சிங்கப்பூர் வீரர் அஸ்வத் கவுசிக் தனது 8 வயதில் போலந்து கிராண்ட் மாஸ்டரை வீழ்த்தியது சாதனையாக இருக்கிறது. இதன் மூலம் ஆர்த்தி கபில் மீது ஒட்டுமொத்த ஊடக வெளிச்சமும் திரும்பி இருக்கிறது. தற்போது 13 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆர்த்தி கபில் பங்கேற்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து ஒன்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்கான தேசிய செஸ் போட்டியில் புனேவில் பங்கேற்க இருக்கிறார். தற்போது ஆர்த்தி கபிலுக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

The post செஸ் விளையாட்டில் சாதனை: கிராண்ட் மாஸ்டரை தோற்கடித்த 9 வயது சிறுவன் appeared first on Dinakaran.

Related Stories: