ஒசூர் அருகே தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை

ஒசூர்: ஒசூர் அருகே தீயில் கருகி ஒருவர் உயிரிழந்த நிலையில் அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஒசூர் அருகே உள்ள கெலமங்கலத்தில் கணேசா காலனி 2வது தெரு பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் விசைத்தறி உரிமையாளராக உள்ளார். இவரது மனைவி ராணி கள்ளக்குறிச்சி பேரூராட்சியில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் பெங்களூருவில் தங்கி படித்து வருகிறார். இவர் தனிநபராக அந்த பகுதியில் வசித்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை
வெங்கடேசன் வழக்கம்போல் வீட்டிற்கு பால் வாங்கி சென்று பால் காசிக்கொண்டிருக்கும் போது திடீரென சத்தம் கேட்டுள்ளது. புகையும் வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம், பக்கத்தினர் அவரது வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் உடல் கருகிய நிலையில் இருந்துள்ளது. உடனடியாக கெலமங்கல காவல்துறையினர் , தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். வீட்டிற்குள் இருந்த வெங்கடேசன் உடல் கருகிய நிலையில் மீட்கப்பட்டு கெலமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருடைய அறையில் பெட்ரோல் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இத்தகைய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

The post ஒசூர் அருகே தீயில் கருகி ஒருவர் உயிரிழப்பு: உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: