பாதுகாப்பு கேட்டு சார்பதிவாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்

 

ஈரோடு, டிச. 10: சார்பதிவாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி ஈரோட்டில் சார்பதிவாளர்கள், அலுவலர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து நேற்று பணி செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே கருங்கல் சார் பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன், சார்பதிவாளரை மர்ம நபர் ஒருவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்றார். ஆனால், தீப்பற்றாததால், சார்பதிவாளர் காயமின்றி தப்பினார். இச்சம்பவத்தை கண்டித்தும், சார் பதிவாளர் அலுவலகத்துக்கும், சார் பதிவாளர்களுக்கும் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி தமிழ்நாடு அரசு சார்பதிவாளர்கள் சங்கத்தினர் நேற்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். இதில், ஈரோடு மாவட்டத்தில் மாநில இணை செயலாளர் தமிழ்செல்வி தலைமையில், ஒரு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகம் உட்பட 19 சார் பதிவாளர் அலுவலகத்தில் உள்ள சார் பதிவாளர்கள், அலுவலர்கள் என 150 பேர் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர்.

The post பாதுகாப்பு கேட்டு சார்பதிவாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்தனர் appeared first on Dinakaran.

Related Stories: