ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு

 

ஈரோடு,டிச.9: ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் கூட்டுறவு வங்கியின் கிளை மேலாளர்கள் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் ஈரோடு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிபாளர் வேலுமணி, காவல் ஆய்வாளர் கவிதா லட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு வங்கி மேலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சைபர் கிரைம் தொடர்பான விளக்கங்களையும், ஆலோசனைகளையும், எதிர் கொள்ளவிருக்கும் சவால்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந் நிகழ்சியில் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குநர் மருத்துவர் சு.செந்தமிழ்செல்வி, வங்கியின் பொது மேலாளர் கண்ணன் மற்றும் வங்கியின் உதவிப் பொதுமேலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் சைபர் கிரைம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Related Stories: