இவர்களில் சிலர் விமானங்கள் தரையிறங்கும் போதும், மேலெழும்பும் போதும் கண்களை கூசச்செய்யும் திறன் கொண்ட லேசர் ஒளிக்கதிர்கள் மற்றும் பிளாஷ் லைட்களை விமானங்களை நோக்கி அடிப்பதாக தெரிய வருகிறது. இவர்கள் விமானங்களை புகைப்படம் மற்றும் வீடியோவில் பதிவு செய்யும்போது இது போன்ற சூழல் ஏற்படுகிறது. இதனால் விமானிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே, லேசர் ஒளி மற்றும் பிளாஷ் லைட்களை பயன்படுத்துவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, மதுரை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது.
The post மதுரை விமானநிலையத்துக்கு வந்து செல்லும் விமானங்கள் மீது லேசர் லைட் பயன்படுத்த தடை: மாநகர காவல்துறை எச்சரிக்கை appeared first on Dinakaran.