இது 116.1 கி.மீ. தொலைவிற்கு 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது. இவற்றில் முக்கியமான வழித்தடமாக இருப்பது கலங்கரை விளக்கம்-பூந்தமல்லி வரையிலான 26 கிலோ மீட்டர் வழித்தடம். இந்த வழித்தடத்தில் கலங்கரை விளக்கம் முதல் கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப் பாதையும் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்போது பூந்தமல்லி-போரூர் வரையிலான பாதையில் கட்டுமான பணிகள் 90% முடிந்துவிட்டது. வரும் பிப்ரவரி மாதத்திற்குள் 100 சதவீதம் நிறைவடைந்து மார்ச்-ஏப்ரலில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் சோதனை ஓட்டம் நடைபெறும் என்று மெட்ரோ ரயில் நிறுவன இயக்குநர் அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.
சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும் போரூர்-பூந்தமல்லி வழித்தடத்தில் 2025ம் ஆண்டு டிசம்பரில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. பூந்தமல்லி-போரூர் மிகவும் நெரிசலான பகுதியாக இருப்பதால் மெட்ரோ ரயில்கள் எப்போது இயக்கப்படும் என்பது பயணிகளின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்தநிலையில்தான் தற்போது 90 சதவிகித பணிகள் முடிந்துவிட்டதாக வெளியாகியிருக்கும் தகவல் பயணிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
The post பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் பணிகள் 90 சதவீதம் நிறைவு: அடுத்தாண்டு டிசம்பரில் பயன்பாட்டிற்கு வருகிறது appeared first on Dinakaran.