இந்நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அபய் எஸ் ஓஹா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாயிஷ் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடகா அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘காவிரி-வைகை-குண்டலாறு ஆகிய இணைப்பு திட்டம் தொடர்பாக மூன்று நிபுணர்கள் ஆய்வு செய்துள்ளனர். அதில் ஒருசில ஆதாரங்கள் உள்ளது. அதுகுறித்த அறிக்கையை நாங்கள் தாக்கல் செய்கிறோம்’ என்று தெரிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த தமிழ்நாடு அரசு தரப்பு வழக்கறிஞர் உமாபதி மற்றும் குமணன் ஆகியோர், ‘காவிரி-வைகை-குண்டலாறு இணைப்பு திட்டம் தொடர்பான விவகாரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கர்நாடகா அரசு முகாந்திரம் இல்லாத காரணங்களையும், பொய்யான தகவல்களையும் வழங்கி வருகிறது’ என்று தெரிவித்தனர். இதையடுத்து இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘காவிரி-வைகை- குண்டலாறு இணைப்பு திட்டம் தொடர்பான விவகாரத்தில் கர்நாடகா அரசுக்கு எந்தவிதத்தில் பாதிப்பு ஏற்படுகிறது’ என்று அம்மாநில அரசுக்கு கேள்வியெழுப்பிய நீதிபதிகள், அதுதொடர்பான ஆதாரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை வரும் ஜனவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
The post காவிரி-வைகை- குண்டலாறு இணைப்பு வழக்கு.! கர்நாடகா அரசு பொய்யான தகவலை தருகிறது: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.