மல்லாபுரம் கிராமத்தில் தடுப்பணை சீரமைக்கப்பட்டு மீண்டும் ஏரிக்கு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி

சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் ஊராட்சி துணை கிராமம் மல்லாபுரம் கிராமத்தில் 10 ஆண்டு காலமாக பொம்ம நாயக்கன் ஏரி வறண்ட நிலையில் உள்ளதால் வார்டு உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஏரிக்கை தண்ணீர் வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்தனர்.

இதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் அர்ச்சனா காமராஜன் உடனடியாக அந்த பகுதிக்கு சென்று பார்வையிட்டார். அங்குள்ள மலைப்பகுதியில் இருந்து வரும் நீர் ஓடையில் 30 ஆண்டுக்கு முன் கட்டப்பட்ட தடுப்பணை உடைந்த நிலையில் இருந்ததால் அதனை பொக்லைன் இயந்திரம் மூலமாகவும் மற்றும் பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் கூலி தொழிலாளியை வைத்து மணல் மூட்டை பிடித்து உடைந்த தடுப்பணையை சீர் செய்து ஓடை மூலமாக பொம்ம நாயக்கன் ஏரிக்கு தண்ணீர் வர தொடங்கியது. இதனால் மல்லாபுரம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஏழுமலை, பச்சையாபிள்ளை மற்றும் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

The post மல்லாபுரம் கிராமத்தில் தடுப்பணை சீரமைக்கப்பட்டு மீண்டும் ஏரிக்கு தண்ணீர் வந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: