பாரிமுனை தம்புசெட்டி தெருவில் கடந்த ஜூலை மாதம் 16ம் தேதி பைக் ஒன்று திருடு போனது. இந்த பைக் மண்ணடியில் வசிக்கும் ஒன்றிய அரசு உயர் அதிகாரிக்கு சொந்தமானது. இதுகுறித்து அவர், எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பைக்கை திருடிய நபரை கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் போலீசார் கண்டுபிடித்தனர்.
அதில் இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர், பாரிமுனை வழியாக கொடிமர சாலை, நேப்பியர் பாலம், மெரினா, கலங்கரை விளக்கம், சாந்தோம், அடையாறு, திருவான்மியூர் வழியாக கிழக்கு கடற்கரை சாலை வரை செல்கிறார். ஹெல்மெட் அணியாமல் ஜாலியாக சென்ற அவர், வாகன சோதனை எதிலும் சிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post ஹெல்மெட் கூட அணியாமல் திருட்டு பைக்கில் ஹாயாக உலா வரும் கொள்ளையன்: சிசிடிவி காட்சி வைரல் appeared first on Dinakaran.