உங்கள் வீட்டிற்கு இதுவரை மின் கட்டணம் செலுத்தாததால், மின் இணைப்பை உடனே துண்டிக்க போகிறோம். மின்சாரத்தை துண்டிக்க கூடாது என்றால், நாங்கள் அனுப்பும் லிங்க்கில் உள்ளே சென்று மின் கட்டணத்தை உடனே செலுத்த வேண்டும் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார். சிறிது நேரத்தில் ராஜசேகர் செல்போனுக்கு ஒரு லிங்க் வந்துள்ளது. அதன் மூலம் உள்ளே சென்று, பணம் செலுத்த முயன்றுள்ளார்.
சிறிது நேரத்தில் இவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.4.60 லட்சம் அடுத்தடுத்து சிறிது நேரத்தில் எடுக்கப்பட்டதாக வங்கியில் இருந்து குறுஞ்செய்தி வந்தது. அதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஜசேகர் உடனே சம்பவம் குறித்து சைபர் க்ரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின்படி சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post மின் வாரிய ஊழியர் போல் நடித்து வீட்டு உரிமையாளரிடம் ரூ.4.60 லட்சம் மோசடி: போலீசார் விசாரணை appeared first on Dinakaran.