அரசியலில் அடிப்படை அறிவை விஜய் வளர்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை அட்வைஸ்

கோவை: பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நேற்று கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: அம்பேத்கருடைய புத்தகத்தை வெளியிடவும் தொகுப்பதற்கும் இந்தியாவில் உங்களுக்கு ஆளே கிடைக்கவில்லையா?. தமிழகத்தில் அம்பேத்கரை வைத்து அரசியல் வியாபாரம் நடத்துகிறார்கள். லாட்டரி மார்டினின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, ஆனந்த் டெல்டும்டேவை புத்தக வெளியிட்டு விழாவுக்கு அழைத்தது ஏன்?. ஆன்ந்த் டெல்டும்டே நகர்ப்புற நக்சலை சேர்ந்த ஒரு முக்கிய குற்றவாளி. தமிழகத்திற்கு நக்சல்களைக் கொண்டு வந்து விடலாம் என திட்டமிடுகிறார்களா? என தெரியவில்லை.

விசிக யார் கையில் உள்ளது? திருமாவளவன் செல்லாத நிகழ்ச்சிக்கு அவரது கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா எப்படி சென்றார்?. ஆதவ் அர்ஜூனா மீது நடவடிக்கை எடுக்க திருமாவளவன் தயங்குவது ஏன்?. நடிகராக இருந்து இப்போதுதான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார், அவருக்கு அரசியலின் அடிப்படை புரிதல் தேவை. அரசியலில் அடிப்படை பொது அறிவை தவெக தலைவர் விஜய் வளர்த்து கொள்ள வேண்டும். விஜய் பேசியதில் எந்த தவறும் இல்லை. விஜய் மணிப்பூர் செல்ல தயாராக இருந்தால், அவருடன் மணிப்பூர் சென்று அங்குள்ள கள நிலவரத்தை எடுத்துரைக்க தயார். மணிப்பூர் பற்றி விமர்சிப்பவர்களை அங்கு அழைத்துச் செல்ல தயார். மணிப்பூரில் யாருக்கும் பிரச்சினை ஏற்படாத வகையில் மத்திய அரசு தீர்வு கண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசியலில் அடிப்படை அறிவை விஜய் வளர்த்துக்கொள்ள வேண்டும்: அண்ணாமலை அட்வைஸ் appeared first on Dinakaran.

Related Stories: