எனது மகளுக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரிடம் கேட்டபோது, தன்னுடன் படிக்கும் தோழி ஒருவர் மூலம் பழக்கமான ஆண் நண்பர்கள் அடிக்கடி வெளியே அழைத்து சென்று வந்ததாக கூறினார். இதுகுறித்து அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதற்கு மகளிர் போலீசார் சம்பவம் நடந்த இடம் சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையம் எல்லையில் வருவதால் இங்கு புகார் அளிக்க கூறினர். அதன்படி நான் இங்கு புகார் அளித்துள்ளேன். எனவே எனது மனவளர்ச்சி குன்றிய மகளை ஏமாற்றி பாலியல் தொந்தரவு கொடுத்த நபர்கள் அனைவர் மற்றும் எனது மகளின் தோழி மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியிருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அந்த புகாரின் படி போலீசார் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியிடம் தனியாக 3 மணி நேரத்திற்கு மேல் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி தனது தோழி மூலம் அறிமுகமான நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று ஒன்றாக இருந்து வந்ததாக கூறினார். மேலும், நண்பர்களுடன் ஒன்றாக இருந்தது எனக்கு தவறுதான் என்று தெரியாது என வெகுளித்தனமாக கூறியுள்ளார். அதை கேட்டு விசாரணை நடத்திய மகளிர் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். வயதுக்கு வந்த பெண் தனக்கு என்ன நடந்தது என்று கூட சரியாக தெரியாமல் ஆண் நண்பர்களுடன் பல இடங்களுக்கு சென்று வந்தது வியப்பை ஏற்படுத்தியது.
மேலும், மனவளர்ச்சி குன்றிய மாணவியின் செல்போன் விபரங்களை மகளிர் போலீசார் ஆய்வு செய்து, அடிக்கடி மாணவியை தொடர்பு கொண்ட நபர்கள் யார் யார் என்பது குறித்து பட்டியல் எடுத்து விசாரணை நடத்தினர். அதில், திருவள்ளூர் மாவட்டம் அத்தி மஞ்சரிப்பேட்டையை சேர்ந்த சுரேஷ்(20) என்றும் இவர் நந்தனம் கல்லூரியில் படித்து வருவது தெரியவந்தது. மேலும், சுரேஷ் நண்பரான அதே பகுதியை சேர்ந்த பள்ளி மாணவன் ஒருவன், மற்றும் கோயம்பேடு பகுதியை சேர்ந்த ரோஷன், அம்பத்தூரை சேர்ந்த பாண்டி, திருத்தணியை சேர்ந்த மணி, சீனு ஆகியோர் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசியது தெரியவந்தது. மேலும், மாணவியுடன் படிக்கும் சக தோழியும் ஆண் நண்பர்களுடன் பாதிக்கப்பட்ட மாணவி பழக உடந்தையாக இருந்ததும் விசாரணையில் உறுதியானது.
அதைதொடர்ந்து மனவளர்ச்சி குன்றிய மாணவியை பாலியல் தொந்தரவு செய்த பள்ளி, கல்லூரி மாணவர்கள் 8 பேர் மற்றும் தோழி என மொத்தம் 9 பேர் மீது சிந்தாதிரிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் 9 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கூறப்படும் திருவள்ளூரை சேர்ந்த நந்தனம் கல்லூரி மாணவன் சுரேஷ் மற்றும் அவரது நண்பரான பள்ளி சிறுவன் ஆகியோரை நேற்று அதிரடியாக போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது. கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவன் சுரேஷ் மற்றும் பள்ளி மாணவன் அளித்த வாக்கு மூலம் குறித்து போலீசார் கூறியதாவது:
மனவளர்ச்சி குன்றிய மாணவியின் தோழியுடன் நந்தனம் கல்லூரி மாணவன் சுரேஷ் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமானவர். இதனால் சுரேஷ் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் தோழியை பார்க்க அவர் படித்து வரும் மகளிர் கல்லூரிக்கு அடிக்கடி நேரில் சென்று சந்தித்து பேசுவது வழக்கம். அப்போது கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பாதிக்கப்பட்ட மாணவியை சுரேஷ் பார்த்து, அவரது இன்ஸ்டாகிராம் தோழியிடம் இந்த பெண்ணை எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது. எனக்கு அறிமுகம் செய்து வைக்க முடியுமா என்று கூறியுள்ளார். அதன்படி அவரது தோழியும் சுரேசுக்கு மனவளர்ச்சி குன்றிய மாணவியை அறிமுகம் செய்து வைத்து அவரது செல்போன் எண்ணையும் வாங்கி கொடுத்து
உள்ளார்.
அதன் பிறகு சுரேஷ் அடிக்கடி மாணவிக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பி காதலிப்பாக தெரிவித்துள்ளார். அதை உண்மை என்று நம்பி அந்த மாணவி சுரேஷிடம் அடிக்கடி மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். பிறகு மாணவி கல்லூரிக்கு வந்ததும், கல்லூரியை கட் அடித்துவிட்டு தனது காதலன் சுரேசுடன் பைக்கில் வெளியே சென்று வந்துள்ளார். அப்போது மாணவி கேட்டதை எல்லாம் சுரேஷ் வாங்கி கொடுத்துள்ளார். மாணவிக்கு அதிகமாக சாக்லேட் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு, சுரேஷ் அவருக்கு விலை உயர்ந்த சாக்லேட்டுகளை வாங்கி கொடுத்து, தனது செல்போனில் ஆபாச வீடியோக்களை காட்டி, அவருக்கு பாலியல் உணர்வுகளை தூண்டி பிறகு வால்டாக்ஸ் சாலை மற்றும் பெரியமேடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து மாணவியை கட்டாயப்படுத்தி அழைத்து சென்று உல்லாசமாக இருந்து வந்தது தெரியவந்தது.
மாணவிக்கு இது தவறு என்று தெரியாமல் சுரேசுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் சுரேஷ் சாக்லேட் வாங்கி கொடுத்தால் மாணவி எங்கு வேண்டும் என்றாலும் வருகிறார் என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, தனது நெருங்கிய நண்பர்களுடன் மாணவியை பேச வைத்து அவர்களுடன் நெருக்கமாக இருக்க ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளார். அந்த வகையில் கடந்த ஓராண்டுக்கு மேலாக மாணவியை அவரது மனவளர்ச்சி குன்றிய நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு சீரழித்து வந்தது தெரியவந்தது. மாணவியை அடிக்கடி ஆண் நண்பர்கள் தவறான செயலுக்கு அழைத்து செல்வதை அவரது தோழிக்கு தெரிந்தும், அதை தடுக்காமல் ஆண் நண்பர்களுக்கு உதவி செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேநேரம் மாணவிக்கு இது தவறு என்று தெரியாததால் அவர்களுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதை யாரிடமும் தெரிவிக்கவில்லை. தாய் இல்லாததால் மாணவியை அவரது வீட்டிலும் அவரது நடவடிக்கையை கண்காணிக்க முடியாத நிலை இருந்துள்ளது. மனவளர்ச்சி குன்றிய மாணவியை 100 ரூபாய் சாக்லெட் வாங்கி கொடுத்து தன் வசப்படுத்தி ஓராண்டாக சீரழித்து வந்தது விசாரணையில் கைது செய்யப்பட்ட சுரேஷ் மற்றும் அவரது நண்பரான பள்ளி மாணவன் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். இந்த வழக்கில் அதிகளவில் கல்லூரி மாணவர்கள் சிக்கியுள்ளதால், அவர்களை உரிய ஆதாரங்களின் படி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்யும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
The post மனவளர்ச்சி குன்றிய மாணவிக்கு அடிக்கடி சாக்லேட் கொடுத்து உல்லாசமாக இருந்தோம்: பலாத்கார வழக்கில் கைதான நந்தனம் கல்லூரி மாணவன் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.