இந்நிலையில் ஆய்வுக் கட்டுரைகளை தாக்கல் செய்யவும் இறுதி தேர்வுக்கும் போதுமான இடைவெளி இல்லாததால் தேர்வு எழுதும் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கும் அழுத்தத்திற்கும் ஆளாகி இருக்கிறார்கள். தேசிய மருத்துவ ஆணையம் மருத்துவ பட்டமேற்படிப்புகளுக்கான இறுதி தேர்வை 2025 ஜனவரி 31க்குள் நடத்தி முடிக்க உத்தரவிட்டிருந்தது. அந்த அடிப்படையில் எங்களுக்கான இறுதித் தேர்வை டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்த உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தனர். இந்த மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, மாணவர்கள் தரப்பில், வழக்கறிஞர் கே.ரவி ஆனந்த பத்மநாபன் ஆஜராகி, மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்கள் 3 வருட உழைப்பு வீணாகி விடும் என்பதால் ஆய்வு கட்டுரைகளை தாக்கல் செய்வதற்கும், இறுதி தேர்வுக்கு தயாராவதற்கும் மாணவர்களுக்கு போதுமான காலத்தை வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, வரும் டிசம்பர் 9ம் தேதி (நாளை) தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகம் மருத்துவ மேற்படிப்புக்காக அறிவித்திருந்த மருத்துவ பட்டமேற்படிப்பிற்கான இறுதி தேர்வை ரத்து செய்து உத்தரவிட்டார். தேசிய மருத்துவ ஆணைய உத்தரவை பின்பற்றி மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர்களுக்கான இறுதித் தேர்வை டிசம்பர் இறுதி வாரத்தில் அல்லது ஜனவரி முதல் வாரத்தில் நடத்த தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.
The post டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலையில் நாளை நடைபெற இருந்த பட்டமேற்படிப்பு தேர்வு ரத்து: ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.