இது காப்புரிமை சட்டம் 1957 மற்றும் ஐபிசி 1860 ஆகியவற்றை மீறிய குற்றம்’ எனத் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ‘எந்திரன்’ படத்தின் கதை காப்புரிமை தொடர்பாக ஷங்கர் மீது அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்து அவரது சொத்துக்களை பிப்ரவரி. 17ம் தேதி அமலாக்கத் துறை முடக்கியது. அமலாக்கத்துறை நடவடிக்கையை எதிர்த்து இயக்குனர் ஷங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. தனிநபர் புகார் வழக்குக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சொத்துக்களை முடக்கியிருக்க கூடாது என அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்தது. மேலும், அமலாக்கத் துறை ஏப்ரல் 21க்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post எந்திரன் பட கதை காப்புரிமை மீறல் விவகாரம்; இயக்குனர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவு..!! appeared first on Dinakaran.
