திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

சென்னை: திருவண்ணாமலைஅருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருநாள் 13.12.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை 06.00 மணிக்கு நடைபெற உள்ளதை முன்னிட்டும் 14.12.2024 அன்று பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டும் 12.12.2024 வியாழக்கிழமை முதல் 15.12.2024 ஞாயிற்றுக்கிழமை வரை பக்தர்கள் மற்றும் பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் சார்பாக சென்னையிலிருந்தும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்கள் மற்றும் அண்டை மாநிலங்களான பெங்களூரு, புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்தும் மேற்கண்ட நாட்களில் 4089 சிறப்பு பேருந்துகள் மூலம் 10110 நடைகள் இயக்கப்பட உள்ளது.

மேலும், திருவண்ணாமலை நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்ப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து கிரிவலப்பாதையை இணைக்கும் வகையில் 40 சிற்றுந்துகள் கட்டணமில்லாமல் இயக்குவதற்கும், அரசின் வழிகாட்டுதலின்படி கடந்த தீபாவளி பண்டிகையின் போது பயணிகளின் வசதிக்காக தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கியது போல், தீபம் சிறப்பு பேருந்து இயக்கத்தின் போதும் 150 தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு பயணம் செய்ய எதுவாக https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம்.

The post திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 4,089 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: