மேலும் தற்போது, வடகிழக்கு பருவமழை தொடங்கி பலத்த மழை பெய்து வருகிறது. மேலும், பெஞ்சல் புயல் காரணமாக இப்பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் அருகில் உள்ள புதர்களில் இருந்து பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துகள், சில நேரங்களில் பள்ளி வகுப்பறைக்குள் ஊர்ந்து செல்கிறது. இதன் காரணமாக மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர். அதனால் மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம். எனவே விரைவில் இடிந்து விழுந்துள்ள சுற்றுச்சுவரை மீண்டும் கட்டி தர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
The post மீஞ்சூர் அருகே அரசு பள்ளி சுற்றுச்சுவர் இடிந்து சேதம் appeared first on Dinakaran.