இந்நிலையில், சென்னை அசோக் நகரில் அம்பேத்கர் நூல் வெளியிட்டு நிகழ்ச்சியில் ஒன்றில் திருமாவளவன் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது; எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். சமூக மாற்றம் ஏற்படுத்துவதற்கான தாக்கத்தை நாம் உருவாக்க வேண்டும். தடுமாறுகிறார் திருமா என்கிறார்கள், பின்வாங்குகிறார் திருமா என்கிறார்கள். நம்முடைய தன்மானத்தை, சுயமரியாதையை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. தடுமாறுகிறார் என்று சொல்பவர்களுக்கு நான் பதில் சொல்லவில்லை. வி.சி.க. தொண்டர்கள் தடுமாறக்கூடாது என்பதற்காகவே கூறுகிறேன். நம் சுயமரியாதை, தன்மானம், கருத்தியல் நிலைப்பாட்டை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. கருத்தியல் களத்தில் எவ்வளவு தெளிவுடன் துணிவோடு இருக்கிறோம் என தெளிவுபடுத்தவேண்டிய தேவையில்லை என்று திருமாவளவன் கூறினார்.
The post தடுமாறுகிறார் திருமா என்கிறார்கள்.. எங்கள் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம்: விசிக தலைவர் திருமாவளவன் பதில்!! appeared first on Dinakaran.