தனியார் பள்ளி ஆசிரியர்களை சுற்றுலா அழைத்து செல்வதாக ரூ.18.76 லட்சம் நூதன மோசடி: டிராவல்ஸ் உரிமையாளர் கைது

சென்னை: பள்ளி ஆசிரியர்களை வடமாநிலங்களுக்கு 7 நாள் சுற்றுலா அழைத்து செல்வதாக ஆசை வார்த்தை கூறி ரூ.18.76 லட்சம் வசூலித்து மோசடி செய்த தனியார் டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். எழும்பூரியில் உள்ள பிரபல தனியார் பள்ளியின் முதல்வர், எழும்பூர் காவல் நியைத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எங்கள் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் என 50 பேரை வட மாநிலங்களுக்கு 7 நாட்கள் சுற்றுலா அழைத்து செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, கடந்த 2023ம் ஆண்டு, பாலாஜி என்பவர் நடத்தும் டிராவல்ஸ் நிறுவனத்தை அனுகினோம். அப்போது, சுற்றுலா செல்ல ரூ.19 லட்சம் ஆகும் என பாலாஜி கூறினார். இதையடுத்து, 3 தவணைகளாக ரூ.18.76 லட்சத்தை டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பாலாஜியிடம் வழங்கப்பட்டது. ஆனால் அவர் சொன்னப்படி கடந்த ஏப்ரல் மாதம் சுற்றுலா அழைத்து செல்லாமல் ஏமாற்றி விட்டார். இதனால் நாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, அவர் முறையாக பதில் அளிக்கவில்லை.

எனவே அவரிடம் இருந்து ரூ.18.76 லட்சத்தை பெற்று தர வேண்டும், என்று கூறியிருந்தார். இதுகுறித்து எழும்பூர் போலீசார் விசாரணை நடத்திய போது, ஆழ்வார்பேட்டையை சேர்ந்த பாலாஜி (48) என்பவர், அவரது டிராவல்ஸ் நிறுவனத்தை கொரோனா காலமான 2020ம் ஆண்டே மூடிய நிலையில், தனது நிறுவனம் செயல்படுவது போல் தனியார் பள்ளி முதல்வரிடம் கூறி ரூ.18.76 லட்சம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார், தனியார் டிராவல்ஸ் நிறுவன உரிமையாளர் பாலாஜியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

The post தனியார் பள்ளி ஆசிரியர்களை சுற்றுலா அழைத்து செல்வதாக ரூ.18.76 லட்சம் நூதன மோசடி: டிராவல்ஸ் உரிமையாளர் கைது appeared first on Dinakaran.

Related Stories: