இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, வடிவேலு தரப்பில், இந்த வழக்கை தாக்கல் செய்த பிறகும், சிங்கமுத்து தொடர்ந்து அவதூறு பேட்டிகளை அளித்து வருவதாக, குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் வழக்கு தாக்கல் செய்த பின் எந்த பேட்டியும் கொடுக்கவில்லை எனவும், வழக்கில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கடைசி வாய்ப்பாக வழக்கை தள்ளிவைக்க வேண்டும் எனவும் சிங்கமுத்து தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று, வழக்கை டிசம்பர் 11ம் தேதி தள்ளி வைத்த நீதிபதி, வடிவேலுவுக்கு எதிராக தெரிவித்த கருத்துக்களை திரும்பப் பெற்றுக் கொள்வதாகவும், இனிமேல் அவருக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் எந்த கருத்தையும் தெரிவிக்க மாட்டேன் எனவும் உத்தரவாதம் அளித்து மனுத்தாக்கல் செய்யும்படி, சிங்கமுத்து தரப்புக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், பேட்டி வீடியோக்களை நீக்கும்படி சம்பந்தப்பட்ட யூ டியூப் சேனல்களுக்கு கடிதம் அனுப்பும் படியும் சிங்கமுத்து தரப்புக்கு நீதிபதி உத்தரவிட்டு உள்ளார்.
The post நடிகர் வடிவேலுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவிக்க மாட்டேன் என உத்தரவாதம் தர வேண்டும் : நடிகர் சிங்கமுத்துவிற்கு ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.