சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம்!

மும்பை: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்தது. ஹைபிரிட் முறையில் போட்டி நடைபெற வாய்ப்புள்ளதால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி பொதுவான ஒரு இடத்தில் நடைபெறும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் அல்லது இலங்கையில் இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம், ஏற்றுக் கொண்டால் ஹைபிரிட் முறையில் சாம்பியன்ஸ் டிராபி நடைபெறும் என்று கூறப்படுகிறது.

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் பாகிஸ்தானில் நடைபெறுகிறது. இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அரசியல் சூழல் காரணமாக பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில், பாகிஸ்தானில் விளையாட இந்திய அணி மறுத்த நிலையில் ஹைபிரிட் முறையில் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

The post சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை ஹைபிரிட் முறையில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சம்மதம்! appeared first on Dinakaran.

Related Stories: