விராலிமலை,டிச.6: விராலிமலை ஊராட்சி சார்பில் பெஞ்சல் புயல் நிவாரண பொருட்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தமிழகத்தில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்ட கலெக்டர் அருணா லாரிகளில் அனுப்பிவைத்து வருகிறார். அந்த வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் விராலிமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் 5 கிலோ அரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப்பருப்பு, கோதுமை மாவு,மிளகாய் தூள், மல்லித்தூள், சாம்பார் தூள்,
தேனிர் தூள், சேமியா, சர்க்கரை,மஞ்சள் தூள், சீனி,கடுகு, சீரகம், சோம்பு,மிளகு, வெல்லம் உள்ளிட்ட ரூபாய் 1000 மதிப்புள்ள பொருட்கள் அடங்கிய 700 தொகுப்பு பைகளை வாகனம் மூலம் விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து புதுக்கோட்டைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. நிகழ்ச்சியில், ஒன்றிய குழு தலைவர் காமு மணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்திபன், பாலசுப்பிரமணியன்(கிஊ), விராலிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியசீலன், அன்பழகன் உள்ளிட்ட அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
The post புயல் நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு appeared first on Dinakaran.