போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றவர் கைது

புழல்: சென்னை கண்ணதாசன் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (74). இவர் கடந்த 1991ம் ஆண்டு செங்குன்றம் அடுத்த புள்ளி லைன் செல்வ விநாயகர் கோயில் நகரில் 1800 சதுர அடி வீட்டுமனை வாங்கி உள்ளார். அதை அம்பத்தூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து ஒரிஜினல் பத்திரம் வைத்துள்ளார். கடந்த 3 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாததால் இந்த இடத்தை பார்க்காமல் இருந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் ரியல் எஸ்டேட் செய்து வரும் அழிஞ்சிவாக்கம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன்(63) என்பவர், கடந்த 2016ம் ஆண்டு போலி ஆவணங்கள் தயார் செய்து, அந்த இடத்தை விற்பனை செய்து உள்ளார்.

இதுபற்றி அறிந்த ராமகிருஷ்ணன், ராஜேந்திரனிடம் இதுபற்றி கேட்டபோது, அவர், 2 பேருடன் சேர்ந்து மிரட்டி உள்ளனர். இதுகுறித்து செங்குன்றம் குற்றப்பிரிவு போலீசில் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்து பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post போலி ஆவணம் தயாரித்து நிலத்தை விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: